மாநகராட்சியாக உயர்த்தி அரசாணை:
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் முதலில் 9–5–1866 ம் ஆண்டு நகராடசியாக தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தில் உள்ள தலை சிறந்த பழமையான நகராட்சியாக விளங்கியது.
9–5–1866 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நகராட்சி 16–10–1943 ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 16–10–1963 ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 5–9–1983 ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக கடந்த 24 வருடங்களாக செயல்பட்டு வந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க புரதான சின்னமான ராஜராஜசோழ மன்னனால் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் பெரிய கோவில் இந்நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
2011–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தற்போதைய நகரின் பரப்பளவு 36.33 சதுர கிலோ மீட்டரும், 2,22,619 மக்கள் தொகையும் கொண்டதாகும்.
இந்த நிலையில் தஞ்சாவூர் நகராட்சியை முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடந்த 10–4–2013ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி சட்டம், நீதி மன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி சட்டசபையில் மாநகராட்சி மசோதாவை 28–10–2013 ல் தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து மாநகராட்சி மசோதா சட்டசபையில் 30–10–2013 ம் ஆண்டு நிறைவேறியது. தஞ்சை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கான அரசு ஆணையை முதல்– அமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னை தலைமை செயலகத்தில் தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி கோபாலிடம் வழங்கினார்.
இதை தொடர்ந்து இன்று முதல் தஞ்சை மாநகராட்சியாக உருவானது. இதனை தஞ்சையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புவழங்கியும் கொண்டாடினர்.
தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வக்கீல் பிரிவு இணை செயலாளர் தங்கப்பன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், நகர செயலாளர் பண்டரிநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடை நம்பி, துணை தலைவர் புண்ணியமூர்த்தி, திராவிட வங்கி தலைவர் சிங்காரவேலு, நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன், நகராட்சி துணை தலைவர் மணிகண்டன், நகராட்சி கொறடா சாமி நாதன், கவுன்சிலர்கள் சரவணன், பூபதி, அனிதாராணி ராஜா, சுசீலா, ஹேமலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் சிறப்பு நிலை நகராட்சி 36.33, வல்லம் டவுன் பஞ்சாயத்து 7.60, புன்னை நல்லூர் முத்துமாரியம்மன் கோவில் ஊராட்சி 5.69, கத்திரிநத்தம் ஊராட்சி 4.46, புதுப்பட்டினம் ஊராட்சி 7.99, விளார் ஊராட்சி 8.72, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி 15.21, இனாத்துக்கான் பட்டி ஊராட்சி 6.17, பிள்ளையார்பட்டி ஊராட்சி 10.86, நீலகிரி ஊராட்சி 5.85, ராமராநபுரம் ஊராட்சி 10.16, மேலவெளி ஊராட்சி 6.62, பள்ளியேறி ஊராட்சி 2.36 என மொத்தம் 128.02 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாநகரட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
நகராட்சி எல்லைக்கு வெளியே அமைந்துள்ள தமிழ் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் மாநகராட்சி பகுதியுடன் இணைந்தது.

No comments:
Post a Comment