தஞ்சை தமிழன்..

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks blogger tips and facebook tricks ...http://www.robinsheam.blogspot.com/

Wednesday, February 19, 2014

பாராளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்த போலீசர் தீவிர பாதுக்காப்பில் ஈடுபடுவார்கள்.தஞ்சை சரக புதிய டி.ஐ.ஜி. பேட்டி......

பாராளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்த போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் தஞ்சை சரக புதிய டி.ஐ.ஜி. பேட்டி.

புதிய டி.ஐ.ஜி.

தஞ்சை சரகத்திற்கு புதிய போலீஸ் டி.ஐ.ஜி.யாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றினார். இதையடுத்து அவர் நேற்று மாலை தஞ்சையில் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பாராளுமன்ற தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குற்றங்களைத் தடுக்க போலீசார் மட்டும் கடுமையாக உழைத்தால் போதாது. அவர்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனே பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு

தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் குமார் 1997–ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று சங்கரன்கோவிலில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியை தொடங்கினார். பின்னர் திருவண்ணாமலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

அங்கிருந்து டெல்லி திகார் ஜெயில் கமாண்டன்டாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு 3½ ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார். லக்னோ, பீகார், உத்தரகாண்ட், கவுகாத்தி ஆகிய இடங்களிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்து உள்ளார்.

--–

No comments: