தஞ்சை தமிழன்..

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks blogger tips and facebook tricks ...http://www.robinsheam.blogspot.com/

Wednesday, February 19, 2014

நூலகங்களுக்கு தஞ்சைமாவட்ட ஆட்சியர் வோண்டுகொள்..

நூல்களை தேடி வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நூலகர்கள் உதவ வேண்டும் கலெக்டர் சுப்பையன் பேச்சு
............................................................................................
நூல்களை தேடி வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நூலகர்கள் உதவ வேண்டும் என்று கலெக்டர் சுப்பையன் பேசினார்.

தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்தில் புதிய நூல்கள் மற்றும் மறு பதிப்பு நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பையன் தலைமை தாங்கி, புதிய மற்றும் மறுபதிப்பு நூல்களை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சரஸ்வதிமகால் நூலகம் உலக புகழ் பெற்றது. அங்குள்ள ஓலைச்சுவடிகள், அரிய கருத்துகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். நூலகத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் கார்பன் போல் பதுங்கியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களின் கை வண்ணத்தால் அது பட்டை தீட்டப்பட்டு வைரமாக மாற வேண்டும். இங்குள்ள ஓலைச்சுவடிகளை வைத்து கொண்டு எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம்.

இலக்கியம் மட்டுமல்லாது பல்வேறு துறைகளுக்குரிய தகவல்களும் குவிந்து கிடக்கின்றன. அரிய தகவல்கள் புதைந்துள்ள சரஸ்வதிமகாலில் ஓலைச்சுவடிகளை மூடி வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் பொதுமக்களுக்கு அரிய தகவல்கள் சென்றடையும். இதற்காக மாதம் ஒரு கதை கதம்பம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு தலைப்பில் பேசுவார்கள். சரஸ்வதிமகால் நூலகத்தில் 4, 5 மொழிகளில் ஓலைச்சுவடிகள் உள்ளன.

மேலும் ஜெர்மன் மொழியிலும் ஓலைச்சுவடிகள் இருப்பதாக கேள்விபட்டேன். இவற்றிற்கு மொழி பெயர்ப்பாளர் இல்லை. இதற்கு உதவிட யாரேனும் முன்வந்தால் அதிக தகவல் வெளிவரும். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தர நூலக நிர்வாகம் தயாராக உள்ளது. ஆண்டுதோறும் தமிழ், மராட்டியம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஓலைச்சுவடி பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நூலகத்தின் செயல்பாடு குறித்து காலாண்டு இதழ் ஒன்று வெளியிடப்படும். இங்குள்ள நூல்களை தேடி வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நூலகத்தில் உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டும். சரஸ்வதிமகால் நூலகத்தை பற்றிய உங்கள் கருத்துகளை நூலகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சி கலெக்டர் ராகுல்நாத், சரஸ்வதிமகால் நூலக நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், மனநல மருத்துவர் தியாகராஜன், சரஸ்வதி மகால் நூலகர் சுதர்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments: