தஞ்சை தமிழன்..

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks blogger tips and facebook tricks ...http://www.robinsheam.blogspot.com/

Wednesday, February 19, 2014

திருச்சி-தஞ்சை இடையே இரட்டை இரயில்பாதை....

திருச்சி–தஞ்சை இடையே ரூ.200 கோடியில் இரட்டை ரெயில்பாதைகோட்ட பொது மேலாளர் தகவல்.

நடைபாலம் திறப்பு விழா

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் சாய்வு நடைபாலம் நேற்று திறக்கப்பட்டது. இதில் திருச்சி ரெயில்வே கோட்ட பொது மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– ரெயில் உபயோகிப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி–தஞ்சை இடையிலான இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி இன்னும் 3 மாதத்திற்குள் தொடங்கி 18 மாத காலத்திற்குள் முடிக்கப்பட உள்ளது.

ரூ.200 கோடி

47 கி.மீ தூரம் உள்ள இந்த ரெயில் பாதை பணி ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது. இப்பணியை ரெயல்வே விகாஸ் நிகாம் லிமிடெட்டின் கட்டுமானப்பிரிவு மேற்கொள்ள உள்ளது. கும்பகோணத்தில் வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற உள்ள மகாமக திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட உள்ள ரெயில்வே திட்டங்கள் குறித்து தனியாக கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.அப்போது ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கோபிநாத் உடனிருந்தார்.

No comments: